வீட்டையே நூலகமாக மாற்றிய சாதனை மனிதர்

நெல்லையில் வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான திவான் என்பவர், ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை சேகரித்து வீட்டையே நூலகமாக மாற்றியுள்ளார்.
வீட்டையே நூலகமாக மாற்றிய சாதனை மனிதர்
x
பாளையங்கோட்டையைச் சேர்ந்த திவான், அரிய வகை புத்தகங்களை தேடி பிடித்து வாசிக்கும் பழக்கத்தை கொண்டவர். அந்த வகையில் 1590 ஆம் ஆண்டு, 1790 ஆம் ஆண்டின் அச்சிடப்பட்டு புழக்கத்தில் இருந்த புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளார். இது தவிர அரசியல் தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் நடத்திய பத்திரிகையின் முதல் பிரதியையும் நூலகத்தில் வைத்துள்ளார். சிந்து சமவெளி நாகரிகத்தை போற்றும் வகையில் ஜான் மார்ஷல் எழுதிய புத்தகம், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களால் எழுதப்பட்ட தமிழ் பேரரசர்கள், என்பது உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை கொண்டு தமது வீட்டையே நூலகமாக மாற்றியுள்ளார் திவான். 

Next Story

மேலும் செய்திகள்