பாலிவுட்டா? தென்னிந்திய படமா? - பீஸ்ட் க்ளைமாக்ஸை கலாய்த்த ஐ.ஏ.எஃப் அதிகாரி

பீஸ்ட் பட க்ளைமாக்ஸ் காட்சியை பகிர்ந்து விமானப்படை அதிகாரி ஒருவர் எழுப்பிய கேள்வி டிவிட்டரில் பேசுபொருளாகியுள்ளது. லாஜிக்கில்லா காட்சிகளை வைத்து டிவிட்டரில் நடக்கும் அலப்பறைகள் பற்றி காட்சி தொகுப்பு...
பாலிவுட்டா? தென்னிந்திய படமா? - பீஸ்ட் க்ளைமாக்ஸை கலாய்த்த ஐ.ஏ.எஃப் அதிகாரி
x
பீஸ்ட் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பகிர்ந்து நான் கேள்வி கேட்க நிறைய விஷயங்கள் உள்ளன என டிவிட்டரில் பதிவிட்டார் இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர்....

இதனை பார்த்த அவரது நண்பர்கள்... என்ன இது... யோசிக்க ஒன்றுமே இல்லை... இதில் சுத்தமா லாஜிக்கே இல்லை என கருத்து பதிவிட்டனர்...

இதனை பிடித்துக்கொண்ட சிலர், விஜயை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் அவர் படத்தில் வரும் சில காட்சிகளை பகிர்ந்து கிண்டலடித்தனர்...

அவ்வளவுதான் ஆரம்பித்தது டிவிட்டர் சண்டை...

ஆனால் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என சொல்லும்படி, கோலிவுட்டிலேயே மற்ற நடிகர்கள் நடித்த படங்களின் காட்சிகளை காண்பித்து பதில் கேள்வி எழுப்பினர், ரசிகர்கள்....

இதோடு நிற்கவில்லை.. தென்னிந்திய படங்களா, பாலிவுட் படங்களா என விரிவடைந்தது இந்த சண்டை... அதுவும் விமானப்படை  அதிகாரி கேள்வி எழுப்பியது போன்றே எங்களுக்கும் கேட்க கேள்விகள் நிறைய உள்ளன என கூறி, பாலிவுட்டில் உள்ள லாஜிக்கில்லா பட காட்சிகளை பகிர்ந்தனர் ரசிகர்கள்...

இதற்காக #WeTooHaveQuestions என்ற ஹாஷ்டேக்கையும் பயன்படுத்தினர்... 

ஆக மொத்தம் லாஜிக்கில்லா சீன்களை வைத்து லாஜிக்கோடு டிவிட்டரில் சண்டை போட்டு வருகின்றனர் ரசிகர்கள்..


Next Story

மேலும் செய்திகள்