சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு - வருமான வரித்துறை பதில்

சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு - வருமான வரித்துறை பதில்
x
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் இருந்து தங்களை நீக்க‌க்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக பேசப்பட்ட சம்பளத்தில், 4 கோடி ரூபாய் பாக்கியை வழங்க தயாரிப்பாளருக்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், படத்தால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பதில் அளித்திருந்தார். இந்த வழக்கு  நீதிபதி எம்.சுந்தர் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்த‌து. அதில், சிவகார்த்திகேயன் மற்றும் ஞானவேல்ராஜா இடையே உள்ள பிரச்னைக்கும், வருமான வரித்துறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கில் இருந்து வருமான வரித்துறையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்