கமலின் "பீம்பாய்" பிரவீன்குமார் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

கமல்ஹாசனுடன் பீம்பாயாக நடித்த பிரபல நடிகர் பிரவீன்குமார் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
x
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில், கமலுக்கு உதவியாளராக வந்த பீம்பாய் கதாபாத்திரம், பெரும் பிரபலமடைந்தது. 

அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த பிரவீன்குமார், மகாபாரதம் தொடரில், பீமனாக நடித்து மேலும் பிரபலமடைந்தார். லோகா, துஷ்மன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர், திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். இதனிடையே, சிறந்த தடகள வீரரான பிரவீன் குமார், அர்ஜூன விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றவர். 

விளையாட்டில் அவர் செய்த சாதனைக்காக, எல்லை பாதுகாப்புப் படையில் துணை கமாண்டண்ட் பதவியை அலங்கரித்தார். சினிமா, விளையாட்டு இரண்டையும் தாண்டி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வந்த பிரவீன்குமார், பின்னர் பாஜகவில் சேர்ந்தார். 

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சைபெற்ற அவர், காலமானார். அவருக்கு திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்