நீண்ட நாட்களுக்கு பின் வெளியே வந்த ரஜினிகாந்த்

சென்னையில் நடைபெற்ற தனியார் ஹோட்டல் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.
x
சென்னையில் நடைபெற்ற தனியார் ஹோட்டல் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். கொரோனா 3 ஆவது அலைக்கு பிறகு, நடிகர் ரஜினிகாந்த் பொது இடங்களில் வெளியே வருவது குறைந்து விட்டது. கடந்த மாதம் பொங்கல் தினத்தன்று கூட, வீட்டில் இருந்தவாரே ரசிகர்களுக்கு கையசைத்தார். இந்நிலையில் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஹோட்டலை திறந்து வைத்துள்ளார். இவருடன், இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்