“லதாவிடம் நான் கற்றுக்கொண்டவை“ - ரகுமானின் உருக்கமான வீடியோ

லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அவருடனான தனது அனுபவத்தை உருக்கமான வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
x
லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அவருடனான  தனது அனுபவத்தை உருக்கமான வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் தனக்கு மேடை நிகழ்ச்சி நடத்த கற்று கொடுத்தவரே லதா மங்கேஷ்கர் தான் என்றும் ஒவ்வொரு பாடலுக்கும் லதா மங்கேஷ்கர் எடுக்கும் மெனக்கெடல்களை கண்டு தாம் வியந்துள்ளதாகவும் கூறியுள்ளார். லதாவின் ஒவ்வொரு பாடலுக்குள்ளும் ஆழமான அர்ப்பணிப்பும், அன்பும், நேரம் தவறாமை போன்ற உயர்ந்த குணங்கள் உள்ளிட்டவை உள்ளடங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான், இதனை லதா மங்கேஷ்கரிடம் இருந்து இளம் தலைமுறையினர் கற்று கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்