"டப்பிங் சங்கத்தில் பல லட்சம் ரூபாய் ஊழல்" - "ராதாரவியை கேள்வி கேட்டால் சங்கத்தில் இருந்து நீக்கம்"

டப்பிங் யூனியன் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
x
டப்பிங் யூனியன் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராதாரவி தலைமையிலான டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நிகழ்ந்ததாக புகார் எழுந்துள்ளது. இதனை தொழிலாளர் நலத்துறை உறுதி செய்யதுள்ள நிலையில் மயிலை குமார், முரளிகுமார், தாசரதி, மதியழகன் உள்ளிட்ட சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டப்பிங் சங்கத்தில், ராதாரவி நிர்வாகத்தின் கீழ் இதுவரை ரூ.10கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். கொரோனா காலத்தில் நடிகர்கள் வழங்கிய நிவாரண நிதி, பாதி உறுப்பினர்களுக்கு கிடைக்கவே இல்லை என்றும், அதுவும் அவரது ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக புகார் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்