தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
x
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் நட்சத்திர ஜோடியான  சமந்தா - நாக சைதன்யா இருவரும்  விவாகரத்து செய்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் ஜோடி பிரிவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து டுவிட்டரில் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 18 ஆண்டுகளாக நண்பர்கள், தம்பதி, பெற்றோர் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது எனவும் தற்போது,  ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஐஸ்வர்யாவும், நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம் என்றும் இருவரும் சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம் எனவும் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். பிரபல ஜோடியான நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஏற்கனவே, நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் தனது முதல் கணவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்