'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Vikram Vedha

இன்று நடிகர் ஹிரித்திக் ரோஷனின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
x
தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கிறார். தமிழில் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி தம்பதியினரே இந்தியிலும் படத்தை இயக்குகின்றனர். இந்த படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிய நிலையில், இன்று நடிகர் ஹிரித்திக் ரோஷனின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் படத்தின் வில்லனாக விஜய் சேதுபதியும், 
விஜய் சேதுபதிக்கு வில்லனாக மாதவனும் நடிப்பில் அசத்தியிருந்தனர். இந்தியில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும்  நடிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்