மனைவியை விவாகரத்து செய்தார் டி.இமான்

முன்னணி இசையமைப்பாளரான டி.இமான், தனது மனைவியை விவகாரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
x
முன்னணி இசையமைப்பாளரான டி.இமான், தனது மனைவியை விவகாரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்லவே, நானும் மனைவி மோனிக்கா-வும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். நலம் விரும்பிகள், இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி என்றும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்