அமெரிக்காவில் நடிகர் ரஜினிகாந்த் - ரசிகர்களுடன் உற்சாக சந்திப்பு

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்குள்ள தனது ரசிகர்களை சந்தித்தார்.
x
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்குள்ள தனது ரசிகர்களை சந்தித்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாயுடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்குள்ள மாயோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்துக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் வெளியே வரும் போது ரசிகர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தொலைபேசி மூலம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அண்மையில் கவிஞர் வைரமுத்து பதிவு வெளியிட்டிருந்தார். 
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ரஜினிகாந்த் அந்நாட்டு வாழ் இந்தியர்களையும், ரசிகர்களையும் உற்சாகமாக சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்