சுசீந்திரனின் ஆன்லைன் சினிமா வகுப்பு - படைப்பாளர்கள் மத்தியில் வரவேற்பு

இயக்குநர் சுசீந்திரன் நடத்தவிருக்கும் ஆன்லைன் சினிமா பயிற்சி வகுப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், இதற்காக அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
x
இயக்குநர் சுசீந்திரன் நடத்தவிருக்கும் ஆன்லைன் சினிமா பயிற்சி வகுப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், இதற்காக அவர் நன்றி தெரிவித்துள்ளார். வெண்ணிலா கபடிக் குழு, அழகர் சாமியின் குதிரை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய சுசீந்திரன்,  வருகின்ற14-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை ஆன்லைன் சினிமா வகுப்பு நடத்துகிறார். ஒரு வகுப்பிற்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டணம் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுசீந்திரன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்