"திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி - விதிமீறல்" - மத்திய உள்துறை செயலாளர் தமிழக அரசுக்கு கடிதம்
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை அனுமதி அளித்திருப்பது விதிமீறல் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
நூறு சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை இயங்க அனுமதி என்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை ஒட்டி, விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டு, அதற்கான பணிகளை படக்குழு செய்து வந்த நிலையில், திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்தார். 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கேட்கவே இந்த சந்திப்பு என்ற கூறப்படுகிறது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்குமாறு நடிகர் சிம்பு அறிக்கை மூலம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்நிலையில், சினிமா துறையினரின் வேண்டுகோளை ஏற்று, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த முடிவு திரைத்துறையினருக்கும் சினிமா ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சி தரும் விஷயம் என்றாலும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளதுஆனால், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை அனுமதித்திருப்பது விதிமீறல் என மத்திய உள்துறை அமைச்சகம் கண்டித்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாகடிதம் எழுதியுள்ளார்.கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட தளர்வுகளுடன் கூடிய கொரோனா நெறிமுறைகளில், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கே அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக அஜய் பல்லா சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள மத்திய உள்துறை செயலாளர்,மத்திய அரசின் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனக்கூறி, தமிழக அரசு விதித்த உத்தரவை மாற்றி பிறப்பிக்க அறிவுறுத்தி உள்ளார்.
Next Story

