பிரசாத் ஸ்டூடியோ - இசையமைப்பாளர் இளையராஜா விவகாரம்: "மன உளைச்சல் காரணமாக இளையராஜா செல்லவில்லை"

சென்னை பிரசாத் ஸ்டூடியோவிற்கு செல்ல இன்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரசாத் ஸ்டூடியோ - இசையமைப்பாளர் இளையராஜா விவகாரம்: மன உளைச்சல் காரணமாக இளையராஜா செல்லவில்லை
x
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து, இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியேற்றும் விவகாரம் தொடர்பாக, இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் இளையராஜா மனுத்தாக்கல் செய்த நிலையில், இருதரப்பும் பேசி முடிவெடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும், இளையராஜா ஸ்டூடியோவுக்கு காலை 9மணி முதல் மாலை 4 மணிக்குள், ஒரு நாள் சென்று தியானம் செய்து, தனது பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறும் உத்தரவிட்டது. அதன்படி, இன்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இளையராஜாவின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் மன உளைச்சலில் இருப்பதால், இன்று பிரசாத் ஸ்டூடியோ வர இயலாது என அவரது செய்தித் தொடர்பாளர், தகவல் வெளியிட்டுள்ளார்.    


Next Story

மேலும் செய்திகள்