தனுஷ் நடிக்கும் புதிய படம் : செல்வராகவன் - யுவன்சங்கர் ராஜா கூட்டணி

ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக, தனுஷ் - செல்வராகவன் - யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகிறது.
தனுஷ் நடிக்கும் புதிய படம் : செல்வராகவன் - யுவன்சங்கர் ராஜா கூட்டணி
x
ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக, தனுஷ் - செல்வராகவன் - யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகிறது.

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் செல்வராகவன் மற்றும் தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இந்த படத்தை கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தாலும் சில காட்சிகளை இயக்கி திரைக்கதைக்கும் பொறுப்பேற்றிருந்தார் செல்வராகவன். யுவன் இசையில் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகின.

இதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் மீண்டும் தனுஷ் - செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி முத்திரை பதித்தது

இதன் பிறகு புதுப்பேட்டையில் மீண்டும் இந்த கூட்டணி சேர்ந்து கலக்கியது. வெளியான சமயத்தில் வசூலை குவிக்காவிட்டாலும், தற்போது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது . 

தனுஷ் - செல்வராகவன் - யுவன் ...இவர்களில் யார் பேட்டி கொடுத்தாலும், அல்லது சமூக வலைதளத்தில் அடுத்த படம் பற்றி பதிவிட்டாலும், புதுப்பேட்டை 2 எப்போது வரும் என்ற கேள்வி ரசிகர்களிடமிருந்து வரும்.

இந்த லாக்டவுன் சமயத்தில் தான் ஒரு கதையை எழுதி வருவதாக முதலில் தெரிவித்த செல்வராகவன், தனுஷுடன் பணியாற்றுவது எப்போதுமே ஸ்பெஷல் என்று அண்மையில் பதிவிட்டிருந்தார். இது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், 8வது முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி சேர்கிறேன். தனுஷ் கதாநாயகன், கலைப்புலி தாணு தயாரிப்பு என அறிவித்துள்ளார் செல்வராகவன்.

இதனால் , நிச்சயமாக புதுப்பேட்டை 2ம் பாகமாகத்தான் இருக்கும் என்று ரசிகர்களே முடிவு செய்து விட்டனர். இதுபற்றிய கூடுதல் அறிவிப்பு செல்வராகவனிடமிருந்து விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Next Story

மேலும் செய்திகள்