அண்ணாத்த படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த் - நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கி இருக்கும் அண்ணாத்த

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அண்ணாத்த படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த் - நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கி இருக்கும் அண்ணாத்த
x
 படப்பிடிப்பு தளத்தில் என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு.தர்பார் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக மிரட்டிய நடிகர் ரஜினிகாந்த், வேட்டி சட்டை என அசத்தலான கெட்-அப்பில் அண்ணாத்த படம் மூலம் கலக்க இருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, சூரி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்திருக்கிறது. ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார்.ஆரண்ய காண்டம், பிகில் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பும், ஜெயம் படத்தில் வில்லனாக மிரட்டிய டோலிவுட் நடிகர் கோபிசந்தும்  அண்ணாத்த படத்தின் வில்லன்களாக நடிக்கிறார்கள். 
கொரோனா ஊரடங்கு கெடுபிடிகளால், 10 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, டிசம்பர் 14ம் தேதி தொடங்கியது. 
இதில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம், நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் ஐதராபாத் கிளம்பினர். அதே விமானத்தில் கேக் வெட்டி, தனது பிறந்த நாளையும் ரஜினிகாந்த் கொண்டாடினார். படப்பிடிப்பு தளத்தில் ரஜினியுடன் எப்போதும் உடனிருக்கும் மகள் ஐஸ்வர்யா, அவருக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுப்பதாக சொல்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், ரஜினியை யாரும் நெருங்காத வண்ணம் அவர் கவனித்துக் கொள்கிறாராம். மகளுடன் ரஜினி - சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட படத்தை பயன்படுத்தலாம்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் ராமோஜி பிலிம் சிட்டியில்தான், நடிகர் அஜித்தின் வலிமை படத்திற்கான படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு விட்டு, படப்பிடிப்பிற்கு ரஜினிகாந்த் சென்று விட்ட நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பாக சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. விமானம் மூலமாக ஐதராபாத் சென்றால் வெளியே தெரிந்து விடும் என்பதால், அவர்கள் சாலை மார்க்கமாகவே ஐதராபாத் செல்வதாகவும் தகவல் கசிந்துள்ளது. படப்பிடிப்பின் இடைவேளை நேரங்களில், கட்சியின் நடவடிக்கை குறித்து மூத்த நிர்வாகிகளான தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுனமூர்த்தியிடம் ஆலோசனையிலும் ஈடுபடுகிறாராம். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு முடியும் நிலையில், ரஜினியின் அரசியல் கட்சி குறித்தே, அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். Next Story

மேலும் செய்திகள்