உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்கு அங்கீகாரம் - கோல்டன் குளோப் விருது விழாவில் தமிழ் படங்கள்

சூர‌ரைப்போற்று, அசுரன் ஆகிய திரைப்படங்கள், கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் திரையிட தேர்வாகி, உலக அரங்கில் தமிழ் படங்களுக்கு மேலும் ஒரு அங்கீகாரத்தை சேர்த்துள்ளன
உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்கு அங்கீகாரம் - கோல்டன் குளோப் விருது விழாவில் தமிழ் படங்கள்
x
கேட்டாலே புல்லரிக்கும் ஜி.வி.பிரகாஷின் மிரட்டலான இசை... 
தனுஷ், டீஜே, பசுபதி, மஞ்சு வாரியரின் கதாப்பாத்திரத்தில் ஒன்றிப்போன நடிப்பு... எல்லாவற்றிற்கும் மேலாக வழக்கம் போல வெற்றி மாறனின் அசாத்திய படைப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது அசுரன் திரைப்படம்... சாதிய தீண்டாமையை முன்னிறுத்தி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதை தான்...ஆனால் சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படியாக படைத்திருந்தார் வெற்றி மாறன்... படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் சக்க போடு போட்டது, அசுரன்.தற்போது  78 வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் திரையடுவதற்கு தேர்வாகியுள்ளது அசுரன் திரைப்படும்.. உலக அரங்கில் சினிமா துறையின் மிகப்பெரும் கவுரவமாக பார்க்கபடும், கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.  இந்த விருது  விழாவில் திரையிட தேர்வான மற்றொரு தமிழ் திரைப்படம் சூர‌ரைப்போற்று...பாம‌ர‌ர்களை விமானத்தில் பறக்க வைத்த, கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று தழுவலை, நேர்த்தியாக படமாக்கியிருந்தார் சுதா கொங்கரா... 
இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசையமைத்து இருந்தார்.. 
சூர்யா, அபர்னா பாலமுரளி, பரேஷ் ராவல் , ஊர்வசி என படத்தில் நடித்த அனைவரது கதாப்பாத்திரமும் பாராட்டை பெற்றது.ஓடிடியில் வெளியானபோதும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால், லாஸ் ஏஞ்சல்ஸ் வரை பறந்திருக்கிறது சூர‌ரைப்போற்று.ஓடிடியில் வெளியாகி, கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்ட முதல் திரைப்படம் சூர‌ரைப்போற்று தான் என்பது கூடுதல் தகவல். 


Next Story

மேலும் செய்திகள்