சூர்யா தயாரிக்கும் படத்தில் அருண் விஜய் மகன் 'அர்னவ்'

சிறுவர்களை மையமாக வைத்து சூர்யா தயாரிக்கும் படத்தில், நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.
சூர்யா தயாரிக்கும் படத்தில் அருண் விஜய் மகன் அர்னவ்
x
சிறுவர்களை மையமாக வைத்து சூர்யா தயாரிக்கும் படத்தில், நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கும் இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடைபெற்றது. அதன் புகைப்படங்களை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்...

திரிஷாவின் 'ராங்கி' பட சிங்கிள் டிராக் - மாலை 5.30 மணிக்கு 'பனித்துளி' பாடல் வெளியீடு

நடிகை திரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை, எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பனித்துளி என்ற பாடல் மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறித்தனமாக தயாராகும் 'வலிமை' மியூசிக்

அஜித்தின் வலிமை படத்திற்கு இசையமைக்கும் புகைப்படத்தை, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக வலிமை பட அப்டேட் கேட்டு காத்து கொண்டிருந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏற்கனவே பில்லா, மங்காத்தா உள்ளிட்ட திரைப்படங்களில் யுவனின் இசை பெரும் ஹிட்டான நிலையில், தற்போதும் ஒரு மாஸ் ஆன தீம் மியூசிக் வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழாவின் 'அன்பறிவு' பட பூஜை

இசையமைப்பாளரும், நடிகருமானா ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படத்திற்கு அன்பறிவு என்று பெயரிடப்பட்டுள்ளது.  அஸ்வின் ராம் இயக்கும் இந்த படத்தில், காஷ்மிரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், நெப்போலியன், விதார்த், சசி குமார், ஊர்வசி உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கின்றனர். அன்பறிவு படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்