சேலையில் ரசிகர்களை கஅதர்வாவின் 'குருதி ஆட்டம்' பட டீசர் : இன்று மாலை 6 மணிக்கு வெளியீடுவர்ந்த நந்திதா

நடிகர் அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலையில் ரசிகர்களை கஅதர்வாவின் குருதி ஆட்டம் பட டீசர் : இன்று மாலை 6 மணிக்கு வெளியீடுவர்ந்த நந்திதா
x
நடிகர் அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டீசரை வெளியிட உள்ளனர். 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நந்திதாவின் அசத்தலான வீடியோ

நடிகை நந்திதா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நந்திதா, ஏதோ ஒன்றை பரபரப்பாக சுற்றி தேடி கொண்டிருக்கிறார். இதை ஏ.ஆர்.ரகுமானின் சின்னம்மா சிலகம்மா என்ற பாடலுடன் சேர்த்து பதிவிட்டுள்ள வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஜி.வி.பிரகாஷின் 'பேச்சிலர்' பட பாடல் : 'காதல் கண்மணி' என்ற பாடல் வெளியீடு

ஜி.வி.பிரகாஷ் நடித்து இசையமைத்துள்ள பேச்சிலர் படத்தின், காதல் கண்மணி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


'நான் அவன் இல்லை' ஹீரோவின் புதிய படம்


நடிகர் ஜீவன் நடித்துள்ள பாம்பாட்டம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பாம்பாட்டம் திரைப்படத்தை 5 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


கன்னடம் கற்கும் நடிகை அனுபாமா

கொடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தற்போது, தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருடன் நடித்து வரும் அனுபாமா தான் கன்னட மொழி கற்று வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்