ஓ.டி.டி தளத்தில் இன்று ரிலீசான "சூரரைப் போற்று" - டிரெண்டிங்கில் முதல் இடம்

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப் போற்று படம் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
ஓ.டி.டி தளத்தில் இன்று ரிலீசான சூரரைப் போற்று - டிரெண்டிங்கில் முதல் இடம்
x
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள சூரரைப் போற்று படம் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. நடிகர் சூர்யா, நடிகை அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிப்பில் சூரரை போற்று படம், ஓ.டி.டி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. 

தீபாவளிக்கு 4 புதிய படங்களை வெளியிட முடிவு - இரு வாரத்திற்கு வி.பி.எஃப் கட்டணம் தள்ளுபடி எதிரொலி

தீபாவளிக்கு நான்கு புதிய படங்கள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு வாரத்திற்கு விபிஎஃப் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக க்யூப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இரு வாரங்களுக்கு புதிய தமிழ் படங்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், "களத்தில் சந்திப்போம்"... "எம்ஜிஆர் மகன்"... "இரண்டாம் குத்து"... "பிஸ்கோத்" ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

"இரண்டாம் குத்து" திரைப்படத்தின் டீசர், சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும்"  - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

"இரண்டாம் குத்து" திரைப்படத்தின் டீசரை  சமூக வலைதளங்களில் நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வழக்கில்,  "இரண்டாம் குத்து" படத்தின் டீசரில், நாகரீகமற்ற முறையில் காட்சிகள் உள்ளதாகவும், இது போன்ற டீசர்களால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தனர்.Next Story

மேலும் செய்திகள்