கமல் புதிய படம் - நாளை மாலை டீசர் வெளியீடு

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
கமல் புதிய படம் - நாளை மாலை டீசர் வெளியீடு
x
கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

பாடம் கற்றுத் தந்தவர்களுக்கு நன்றி - அமலாபால்

சொந்த முயற்சி தேவை என கற்றுத் தந்தவர்களுக்கு நன்றி என நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். அடிக்கடி தமது புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிடும் நடிகை அமலா பால், நான் இருளில் இருந்தபோது மங்கலாகத் தேர்ந்தெடுத்த அனைத்து விளக்குகளுக்கும், எனது சொந்த வெளிச்சம் எனக்குத் தேவை என கற்பித்ததற்கு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார். 

சவால் விட்டு மாட்டிக் கொண்டேன் - சமந்தா

சவால் விட்டு மாட்டிக் கொண்டதாகவும், தமக்கு உதவும் படியும், நடிகை சமந்தா, வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, தமக்கு உதவுங்கள் என்று கெஞ்சலாக கேட்டுள்ளார். 

பாபி சிம்ஹா பிறந்த நாள் - தனுஷ் வாழ்த்து

நடிகர் பாபி சிம்ஹாவுக்கு,  நடிகர் தனுஷ் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் தனுஷ், பாபி சிம்ஹாவின் 'வசந்தமுல்லை' திரைப்பட போஸ்டர்களை பகிர்ந்துள்ளார். வசந்தமுல்லை படக்குழுவுக்கும் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உடல் எடையை குறைத்த வேதிகா மெல்லிய புடவையில் அசத்தல் 

உடல் எடையைக் குறைத்து, மெல்லிய புடவையில் காட்சியளிக்கும் வீடியோவை தமது சமூக வலைதள பக்கத்தில், நடிகை வேதிகா பகிர்ந்துள்ளார். 

ரசிகர்களை ஈர்க்கும் யாஷிகாவின் ஃபோட்டோ ஷூட் - பிங்க் கலர் காஸ்டியூம் 

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு பிறகு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை யாஷிகா ஆனந்த், சமூக வலைதளங்களில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். 
தற்போது, பிங்க் கலர் உடையில் ஃபோட்டோ ஷூட் வீடியோ ஒன்றை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். 

"மூக்குத்தி அம்மன்"- பகவதி பாபா பாடல்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் மற்றொரு பாடல் வெளியாகி உள்ளது. பகவதி பாபா என்ற அந்த பாடல், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்