நடிகர் விஜய் பெயரில் அரசியல் கட்சி: தந்தையின் கட்சிக்கும், தனக்கும் சம்பந்தமில்லை" - நடிகர் விஜய்

நடிகர் விஜய் பெயரில் புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்த நிலையில், அந்தக் கட்சிக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என, நடிகர் விஜய் அதிரடியாக அறிவித்து உள்ளார்.
நடிகர் விஜய் பெயரில் அரசியல் கட்சி: தந்தையின் கட்சிக்கும், தனக்கும் சம்பந்தமில்லை - நடிகர் விஜய்
x
நடிகர் விஜய் பெயரில் புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்த நிலையில், அந்தக் கட்சிக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என, நடிகர் விஜய் அதிரடியாக அறிவித்து உள்ளார். இதுபற்றி பார்க்கலாம்.

தமிழக அரசியல் களம், வரும் 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை நோக்கி நடைபோட்டு வரும் நிலையில், நடிகர் விஜய் பெயரில் ஒரு புதிய கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பது அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்துள்ளது.

நடிகர் விஜய் பெயரிலான அரசியல் கட்சிக்கு 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த கட்சியை டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்ய அவருடைய தந்தையும், சினிமா இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சார்பில் சினிமா இயக்குனர் எம்.ஜி.ஆர். நம்பி மற்றும் வழக்கறிஞர் சமீர் ஆகியோர் விண்ணப்பம் அளித்து, பரபரப்பை பற்ற வைத்துள்ளனர்.

அந்த விண்ணப்பத்தில் கட்சி தலைவராக ஆர்.பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா சேகர் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்தத் தகவல் வெளியான உடனே தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்ய தொடங்கினர். குடும்ப அரசியலுக்கு மற்றொரு கட்சி தோன்றி இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விமர்சனம் செய்தார்.

ஆனால் அவரது ரசிகர்களும், பத்திரிகையாளர்களும், விஜய், 2026ம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்தக் கட்சியை பதிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். இந்த தகவல் தீயாக பரவிய நிலையில் நடிகர் விஜய் தரப்பு, கட்சி தொடர்பான பரபரப்புக்கு அதிரடி அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்தது.

விஜய்  வெளியிட்ட அறிக்கையில், தனது தந்தை எஸ்.ஏ.சி. தொடங்கிய கட்சிக்கும், தனக்கும் நேரடியாக எந்தவித தொடர்புமில்லை என்று கூறி அதிரடி காட்டினார்.

அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் தனது தந்தை  மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதுவும் என்னை கட்டுப்படுத்தாது என்றும், தந்தை கட்சி தொடங்கியிருக்கிறார் என்பதற்காக எனது ரசிகர்கள் அக்கட்சியில் அவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் விஜய் கடுமையாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதற்கு ஒருபடி மேலே சென்று, எனது புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள நடிகர் விஜய், தனது பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள தந்தை சந்திரசேகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டிளித்த எஸ்.ஏ. சந்திரசேகர், கட்சி தொடங்கியதற்கும், விஜய்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் விஜய்யை அறிமுகப்படுத்தி 
நட்சத்திர அஸ்தஸ்து பெற்றுத் தந்த சந்திரசேகர், தற்போது மகன் பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது இருவருக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்