விஜய் சேதுபதி நடிக்கும் புதிய மலையாள படம் - "19(1)(a)" என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதி புதிதாக மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு "19 (1) (a)" என்று பெயரிடப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய மலையாள படம் - 19(1)(a) என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
x
நடிகர் விஜய் சேதுபதி புதிதாக மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு "19 (1) (a)" என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியுடன் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாறன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். விஎஸ் இந்து இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

நந்திதா வெளியிட்ட புதிய வீடியோ

நடிகை நந்திதா "மறு வார்த்தை பேசாதே" என்ற பாடலுக்கு பதிவு செய்த தனது முக பாவணைகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தனது மனதுக்கு மிகவும் பிடித்த பாடல் இது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தில் குமுதா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த நந்திதா தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார்.


 ரசிகர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு டுவிட்டரில் கீர்த்தி சுரேஷ் உரை

நடிகை கீர்த்தி சுரேஷ், ரசிகர்களுடன் ட்விட்டரில் இன்று மாலை உரையாட உள்ளார். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நடிகர்கள் பலரும், சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக்கி கொண்டனர். அந்த வரிசையில், இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தாம் பதில் அளிக்க உள்ளதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மிஸ் இந்தியா திரைப்படம் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டம்

பாலிவுட் நடிகை டயானா பென்டி நேற்று முன் தினம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். காக்டெயில் என்ற திரைப்படம் மூலம் கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமான  இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடிய டயானா பெண்டி அந்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.Next Story

மேலும் செய்திகள்