ஸ்ரேயா கோஷல் குரலில் 'கடைக்கண்ணாலே' பாடல் - நாளை வெளியாகும் என 'பூமி' படக்குழு அறிவிப்பு
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள பூமி திரைப்படத்தின் 'கடைக்கண்ணாலே' என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள பூமி திரைப்படத்தின் 'கடைக்கண்ணாலே' என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கவிஞர் தாமரை எழுதியுள்ள இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜெயம் ரவியின் 25ஆவது படமாக உருவாகியுள்ள இதனை இயக்குனர் லக்ஷ்மன் இயக்கியுள்ளார்.
ஜப்பான் சர்வதேச திரைப்பட விழாவில் சில்லுக் கருப்பட்டி
ஜப்பானில் நடைபெறும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சில்லுக் கருப்பட்டி படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 2019ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் படத்திற்காக இந்த படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏற்கனவே டொராண்டோ தமிழ்த் திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைக்கு பாட்டு சொல்லி கொடுக்கும் தந்தை - அமிதாப் பச்சன் பகிர்ந்த வீடியோ
பிரபல பாலிவுட் நடிகர் அமிதா பச்சன், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு பாட்டு சொல்லி கொடுக்கிறார். குழந்தையும் தன் தந்தை சொல்லி கொடுப்பதை அப்படியே பின் தொடர்ந்து அழகாக பாடி அசத்துகிறது. அமிதா பச்சன் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை பலரும் லைக் செய்து ரீ- டுவீட் செய்து வருகின்றனர்.
Next Story