போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்த அதிரடி - பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் ரெய்டு

போதைப் பொருள் விவகாரத்தில் அடுத்த அதிரடியாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
x
பாலிவுட்டில் விஸ்வரூபம் எடுத்து நின்ற போதைப் பொருள் விவகாரம், மற்ற திரையுலகத்தையும் விட்டுவைக்கவில்லை. நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான் என பலரும் இதில் சிக்கினர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான விவேக் ஓபராயின் உறவினரான ஆதித்யா ஆல்வா என்ற நபருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில் அவர், மும்பையில் உள்ள விவேக் ஓபராய் வீட்டில் பதுங்கி இருப்பது உறுதியானது. இதையடுத்து நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நடிகர் விவேக் ஓபராயின் வீட்டில் பெங்களூரு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் விவேக் ஓபராயின் உறவினர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. விவேக் ஓபராய், சமீபத்தில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


Next Story

மேலும் செய்திகள்