நடிகர் சங்க தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு - விசாரணை செப்டம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் துவங்கியுள்ளது.
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு - விசாரணை செப்டம்பர் 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு
x
நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019 ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து, நடிகர்கள் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தன.அப்போது, ஆறு மாதங்களுக்கு தேர்தலை தள்ளிவைக்க நிறைவேற்றிய தீர்மானம் செல்லாது என கூற முடியாது  நடிகர் விஷால் தரப்பில் வாதிடப்பட்டது.தேர்தல் நடவடிக்கைகளை எந்த வேட்பாளரும் எதிர்க்கவில்லை என்றும், வாக்குச்சீட்டுகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளதால், அதற்கு கட்டணமாக இரண்டரை லட்சம் ரூபாயை வங்கிதரப்பில் கோரப்படுவதாக விஷால் தரப்பு வாதிடப்பட்டது. வழக்கில் வாதம் முடிவடையாததை அடுத்து விசாரணையை நீதிபதிகள், செப்டம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்