சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் - முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்

சினிமா படப்பிடிப்புகள் நடத்த சுதந்திர தின அறிக்கையில் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் - முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்
x
பட வெளியீடுகள் இன்றி திரையரங்கையும் மூடி., படப்பிடிப்புகளையும் நிறுத்தி, நூற்றைம்பது நாட்களாகிறது என்ற வேதனையை தமிழ் சினிமா முதன் முறையாக இப்போது சந்தித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 80-க்கும் மேற்பட்ட படங்களும், படப்பிடிப்புகளும் தேங்கி நிற்பதாகவும் பாரதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார். தொழில் நுட்பக் கலைஞர்களின் சிறு சேமிப்புகள் கரைந்து, திரைத்துறை மீண்டு வரும் நாளை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் முதலீட்டின் மீதான வரவை எதிர்பார்த்து, இழப்பு மேல் இழப்பை சுமந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். 

card 5

முதலீடு போடும்போதே இழப்பு என்ற நிலை மிகக் கொடுமையானது என்று குறிப்பிட்ட பாரதிராஜா, 

card 6

இந்தநிலை தொடராமல் தடுத்து தமிழ் சினிமா மீண்டும் மூச்சுவிட வழிகாட்டலை திரைத்துறைக்கு வகுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

card 7

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அளித்த அனுமதியைப் போல குறுகிய குழுவோடு, பொது இடங்களில் இல்லாமல், ஸ்டுடியோ அல்லது வீடுகளுக்குள்  திரைப்பட படப்பிடிப்புகளைத் தொடர வழிவகை செய்ய வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். 

card 8

சுதந்திர  தின அறிக்கையில் திரைத்துறை  சிக்கல்களுக்கான விடுதலையும் இடம்பெற வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்