இறப்பதற்கு முன் தனது பெயரை கூகுளில் தேடிய சுஷாந்த் சிங் - கடும் மன அழுத்தத்தில் சுஷாந்த், இருந்ததாக போலீசார் தகவல்
பதிவு : ஆகஸ்ட் 04, 2020, 01:50 PM
மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சில மணி நேரம் முன்பு தனது பெயரை நடிகர் சுஷாந்த் சிங் கூகுளில் தேடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஜூன் மாதம், மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங், தற்கொலை செய்து கொண்டார்.  அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக, தகவல் வெளியான நிலையில், இது குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை, சுஷாந்தின் தந்தை, காதலி ரியா, குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர் நடிகைகள், என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுஷாந்த் இறப்பதற்கு முன்பு தமது பெயரை, கூகுளில் தேடி அது குறித்த கட்டுரைகளை, படித்தாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்தும், செய்திகளை படித்ததாக மும்பை போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது மேலாளர் திஷா சாலியன், தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது பெயரையும், சுஷாந்த் கூகுளில் தேடியதாக மும்பை போலீசார் கூறியுள்ளனர். நடிகர் சுஷாந்த் சிங், பைபோலார் டிஸ் ஆர்டர் எனும் மன அழுத்த நோய்க்கு, மன நல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். சுஷாந்த்தின் வங்கி கணக்கிலிருந்து அவரது காதலி ரியாவுக்கு, 15 கோடி ரூபாய் பண பறிமாற்றம் செய்ததாக கூறிய புகார் முற்றிலும் தவறு என்றும், மும்பை போலீசார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு - சிபிஐ விசாரணை தீவிரம்

தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் வீட்டிற்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

64 views

பிற செய்திகள்

நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் - Me too இயக்கத்தில் பரபரப்பை கிளப்பிய நடிகை பாயல் கோஷ்

பாலிவுட்டில் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மீ டூ இயக்கத்தின் கீழ் பாலியல் புகார் தெரிவித்திருப்பது திரை உலகில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது...

149 views

மிஷ்கின் இயக்கும் 'பிசாசு-2'

பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் பிசாசு-2 படத்தை இயக்குகிறார்.

23 views

உணவு உட்கொள்ள தொடங்கிவிட்டார் எஸ்.பி.பி.,- எஸ்.பி.பி. சரண்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உணவு உட்கொள்ள தொடங்கியுள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

39 views

இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் - பிரதமர் மோடிக்கு, நடிகை கங்கனா கோரிக்கை

இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

174 views

நீதிமன்ற உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - சூர்யா

நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

611 views

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை இனையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

21048 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.