"சென்னையில் இருந்து கேளம்பாக்கம் பண்ணை வீடு செல்வதற்கு இ -பாஸ் எடுத்தார் நடிகர் ரஜினிகாந்த்"

சென்னையில் இருந்து கேளம்பாக்கம் பண்ணை வீடு சென்றுவர நடிகர் ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றுள்ளார்.
x
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றுவர நடிகர் ரஜினிகாந்த் இன்று இ-பாஸ் பெற்றுள்ளார்.மருத்துவ அவசர தேவைக்காக செல்வதாக இ-பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னோவா காரில் ஓட்டுநருடன் ரஜினி செல்வதாக பாஸில்விவரங்கள் உள்ளன. ஆதார் அட்டை சமர்ப்பித்து இ பாஸ் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், கேளம்பாக்கத்திற்கு ரஜினி இ-பாஸ் எடுத்துச் செல்கிறாரா என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்