இளையராஜாவுக்கு இடம் தர மறுத்த பிரசாத் ஸ்டுடியோ - புதிய ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்கி வருகிறார் இளையராஜா

அரை நூற்றாண்டாக தமிழ் திரையுலகில் இசையின் அரசனாக திழந்து வரும் இசைஞானி இளையராஜா சென்னையில் தனக்கென ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்கி வருகிறார்
இளையராஜாவுக்கு இடம் தர மறுத்த பிரசாத் ஸ்டுடியோ - புதிய ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்கி வருகிறார் இளையராஜா
x
பிரசாத் ஸ்டுடியோ,கைராசியான ஸ்டுடியோ என்பதால், ராகதேவனின் இசைக்கோர்ப்புகள் அங்கேயே நடந்து வந்தன. வீட்டில் இருப்பதை விட இளையராஜா அதிக நேரம் பிரசாத் ஸ்டுடியோவில் தான் இருப்பார் என்பது திரையுலகம் மட்டும் அல்ல அவரது ரசிகர்களும் அறிந்ததே. இந்த நிலையில், தான், கடந்த ஆண்டு, பிரசாத் ஸ்டுடியோவிற்கும் இளையராஜாவிற்கு பிரச்சனை உருவானது. காவல்நிலையம் வரை சென்றதால், பிரச்சனையை தீர்த்து வைக்க பிரபல இயக்குநர்கள், பாரதிராஜா, செல்வமணி, சீமான் மற்றும் இசையமைப்பாளர் தீனா உள்ளிட்ட பிரபலங்கள் பிரசாத் ஸ்டுடியோ சென்றனர். அப்போது அவர்களை உள்ளே அனுமதிக்காததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதன் பின்னர் பேசிய இயக்குநர் பாரதிராஜா, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சமரசம் பேசி விரைவில் தீர்வு காணப்படும் எனவும், இல்லையெனில் இளையராஜாவிற்கான தனி இடம் அமைத்து தரப்படும் என்றும் கூறினார். அவர் கூறியது போல், தனியாக ஒரு ஸ்டுடியோ அமைக்க திட்டமிட்ட இளையராஜா, கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ தியேட்டரை வாங்கி, அங்கேயே புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரிக்கார்டிங் ஸ்டூடியோ அமைப்பதற்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.

இந்த இடத்துக்கு 'ராஜா ஸ்டூடியோ' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. செப்டம்பருக்குள் அங்கே ஸ்டூடியோ பணிகள் முடிக்கப்பட்டு ரிக்கார்டிங் பணிகள் தொடங்கிவிடும் என்கிறார்கள், இளையராஜாவுக்கு நெருக்கமானவர்கள். 45  ஆண்டுகாலம் இளையராஜாவின் இசையோடு பிணைந்திருந்த பிரசாத் ஸ்டுடியோ அவருக்கு கிடைக்கவில்லை என்றாலும், அவருக்கென்று, அவரது இடத்தில் உருவாகும் 'ராஜா ஸ்டூடியோ'வில் இசைஞானி அமைக்கும் இசை, நம் செவிகளில் ரீங்காரம் பாடும் என்பதில் சந்தேகமில்லை

Next Story

மேலும் செய்திகள்