"திரைத்துறையை நல்வழிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - சீமான்

திரைப்படத்துறையை முழுமையாக சார்ந்து தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையை நல்வழிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்
x
* திரைப்படத்துறையை முழுமையாக சார்ந்து தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

* சிறு முதலீட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கப் பெறாததும், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களே ஆதிக்கம் செலுத்துவதும் இத்துறையின் சிக்கல்களாக இருப்பதாக சீமான் அதில் குறிப்பிட்டுள்ளார். 

* அனுமதி இல்லாமல் இணையதளங்களில் வெளியாவதும், திரையரங்கக் கட்டணங்கள் அதிகமாகயிருப்பதும், திரைத்துறை நசிவதற்கு காரணமாக அமைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

* திரைத்துறையை மீட்டு நல்வழிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுவதை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்