'பட்டாஸ்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் தனுஷ் நடிக்கும் 'பட்டாஸ்' படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டாஸ் படத்தின் முதல் பாடல் வெளியீடு
x
நடிகர் தனுஷ் நடிக்கும் 'பட்டாஸ்' படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பட்டாஸ்' .  'பேட்ட பாய்..' எனத் தொடங்கும் முதல் பாடலை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். விவேக் மற்றும் மெர்வின் இசையமைத்துள்ள இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். 'புதுப்பேட்டை' திரைப்படத்திற்கு பின் 13 ஆண்டுகள் கழித்து தனுஷ்-சினேகா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் .  

Next Story

மேலும் செய்திகள்