விஜய் பட நடிகருக்கு நேர்ந்த சோகம்...
பதிவு : நவம்பர் 03, 2019, 01:35 PM
நடிகருடன் ஒரே மேடையில் அமர மறுத்தது உறுதியானால், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகருடன் ஒரே மேடையில் அமர மறுத்தது உறுதியானால், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜயின் தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த கேரளாவைச் சேர்ந்த பினீஸ் பாஸ்டின், பாலக்காட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி விழாவுக்கு அழைக்கப்பட்டு உள்ளார். ஆனால், அவரை தாமதமாக வரும்படி, மாணவர்கள் கேட்டுள்ளனர். விழா தொடங்கும் போதுதானே அங்கு இருக்க வேண்டும் என்று கூறிய பினீஸிடன், தங்களுடன் மேடையை பகிர்ந்துகொள்ள மற்றொரு விருந்தினரான இயக்குநர் விரும்பவில்லை என உண்மையை கூறியுள்ளனர்.  இதையறிந்த பினீஸ் பாஸ்டின், மேடைக்கு சென்று தரையில் அமர்ந்தார். இந்த விவகாரத்தில், இயக்குநர் கூறியது உண்மையானால் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.268 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : கடலில் வைத்து கைமாறிய போதைபொருள்

சர்வதேச கடல் பகுதியில், 268 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, 7 பேரை கைது செய்துள்ளது. ஏழு செல்போன், ஜி.பி.எஸ் கருவி ஆகியவை கைப்பற்றப்பட்டன.

404 views

ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது : முன்விரோதம் காரணமாக கொலை செய்தது அம்பலம்

புதுச்சேரியில் பிரபல ரவுடி அன்பு ரஜினி கொலைவழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

304 views

பிற செய்திகள்

கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சி : விடுமுறை தினத்தில் குவிந்த மக்கள்

மதுரையில், கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட மாணவர்களும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர்.

10 views

நம்பியார் நூற்றாண்டு விழாவில் ரஜினி, கமல்...

தமிழ்ப்பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் நம்பியார். குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.

11 views

உதயநிதியின் "சைக்கோ" திரைப்படம் : முதல் பாடல் நாளை வெளியாகிறது

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், உதயநிதி தற்போது 'சைக்கோ' த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

20 views

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்த படம்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், அவரது சகோதரரான தனுஷ் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாகவும், இப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

167 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணை கட்டி கொண்டு 5 கி.மீ தூரம் ஓடி உலக சாதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக மணிமுத்து கண்ணைக் கட்டிக் கொண்டு 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.

30 views

ராணுவத்திற்கு உதவ தயாரிக்கப்பட்ட அக்னி -2 சோதனை வெற்றி

ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

66 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.