ஒரே நாளில் மோதும் பிகில் Vs கைதி - சினிமா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் பிகில், கைதி திரைப்படங்கள் திரைக்கு வருகிறது.
ஒரே நாளில் மோதும் பிகில் Vs கைதி - சினிமா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
x
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை குறிவைத்து புதிய திரைப்படங்கள் திரைக்கு வருவது வழக்கம். மக்களும் பண்டிகையின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திரையரங்குக்குகளுக்கு குடும்பத்துடன் சென்று புதிய படங்களை ரசிப்பார்கள். தீபாவளி பண்டிகை ஓட்டி தொடர் விடுமுறை இருக்கும் என்பதால் திரைப்படங்களும் நல்ல வசூலை பெறும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுகிழமை வருகிறது. மறுநாள் திங்கட்கிழமையும் விடுமுறை இல்லை. இதனால் வழக்கத்திற்கு மாறாக இம்முறை தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாக வெள்ளிக்கிழமை அன்றே விஜயின் பிகிலும், கார்த்தியின் கைதியும் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், பிகில் திரைப்படம் 180 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படம் தனியாக திரைக்கு வந்தால், முதலீடு செய்த பணத்தை தயாரிப்பாளர்கள் எடுத்துவிட முடியும் என கருதப்பட்டது. ஆனால், தற்போது கார்த்தியின் கைதியின் திரைப்படமும் அதே நாளில் திரைக்கு வருவதால், இருப் படத்திற்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 950 திரையரங்குகள் உள்ளன. இதில் பிகில் திரைப்படம் 700 திரையரங்குகளிலும், கைதி 250 திரையரங்குகளிலும் திரையிடப்பட உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2 படங்கள் வருவது திரையரங்குகளுக்கும், வியாபாரத்திற்கும் ஆரோக்கியமான சூழலை உண்டாக்கும் என திரைப்படத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனால், பெரிய படங்கள் ஒரே நாளில் மோதும் போது, அது தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபத்தை தராது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் காவலனும், கார்த்தியின் சிறுத்தையும் ஒரே நாளில் திரைக்கு வந்தது. இருப்படங்களும் வெற்றி பெற்ற நிலையில், காவலனின் வசூலை விட சிறுத்தை வசூல் சற்று அதிகமாக இருந்தது. எனினும் அன்றைய காலக்கட்டத்தில் தொடர் தோல்வி படங்களை விஜய் தந்து கொண்டிருந்தார். ஆனால், இன்று விஜய்யின் நிலையோ வேறு.8 ஆண்டுகளுக்கு பிறகு இரு நடிகர்களின் படங்கள் மோதுவதால் இந்த தீபாவளி ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை..

Next Story

மேலும் செய்திகள்