பிகில் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

'பிகில்' திரைப்படத்திற்கு, தடை கோரிய வழக்கின் தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது
பிகில் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
x
விஜய் நடித்து, தீபாவளிக்கு வெளியாக உள்ள 'பிகில்' படத்தின் கதை தன்னுடையது எனவும் கூறி, படத்துக்கு தடை விதிக்க கோரி உதவி இயக்குனர் செல்வா, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர், இது காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் எனக் கூறி, வழக்கை வாபஸ் பெறவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் கீழமை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார். இதையடுத்து, செல்வா தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் அட்லி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பிகில்' படத்தின் கதை, 2018ம் ஆண்டு ஜூலையில் பதிவு செய்யப்பட்டது என்றும், ஆனால் மனுதாரர் தமது கதையை 2018 அக்டோபரில் தான் பதிவு செய்துள்ளார் என்றும் வாதிட்டார்.

கீழமை நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் மனு திரும்பப் பெறப்பட்டதாகவும் கூறினார். தயாரிப்பாளர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,  பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடந்துள்ளதால், தள்ளுபடி செய்யுமாறு வாதிட்டார். அப்போது,  கீழமை நீதிமன்றத்தில் பட நிறுவனம்  தாக்கல்  செய்த மனு மீது முடிவெடுக்கும் முன், வழக்கை வாபஸ் பெறவும், உயர் நீதிமன்றத்தை அணுகவும் கீழமை நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது என கேள்வி எழுப்பிய நீதிபதி  தேதி குறிப்பிடாமல் வழக்கை  தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்