நடிகை மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு

நடிகையும் மாடலிங் அழகியுமான மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகை மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு
x
நடிகையும் மாடலிங் அழகியுமான மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 2019 மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற மாடலிங் அழகி மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் அந்த பட்டம் திரும்ப பெறப்பட்டது. இந்த நிலையில் அவர் தொழிலதிபர் ஜோ மைக்கேல் என்பவர் மீது பல்வேறு புகார்களை கூறி வந்தார். தொழில் போட்டி காரணமாக மீரா மிதுன் மீது ஜோ மைக்கேல் இதுபோல் அவதூறு பரப்புவதாக மீரா மிதுனின் தாயார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் தன்னையும் தன் குடும்பத்தினரையும் தாக்க மீரா மிதுன் திட்டமிட்டுள்ளதாக ஜோ மைக்கேல் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்