கோமாளி பட சர்ச்சை விவகாரம் குறித்து நடிகர் லாரன்ஸின் டிவிட்டர் பதிவு

கோமாளி பட சர்ச்சை விவகாரம் குறித்து நடிகர் லாரன்ஸின் டிவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோமாளி பட சர்ச்சை விவகாரம் குறித்து நடிகர் லாரன்ஸின் டிவிட்டர் பதிவு
x
கோமாளி பட சர்ச்சை விவகாரம் குறித்து நடிகர் லாரன்ஸின் டிவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோமாளி படத்தின் முன்னோட்ட காட்சியில், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வரவு குறித்து வைக்கப்பட்டிருந்த காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த காட்சி நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் "நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும் போது... அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது" என்று நடிகர் லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. 
 


Next Story

மேலும் செய்திகள்