முதல் முறையாக விஜய் படத்தில் தோன்றும் ஏ.ஆர்.ரஹ்மான்

நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஒரு பாடல் காட்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தோன்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் முறையாக விஜய் படத்தில் தோன்றும் ஏ.ஆர்.ரஹ்மான்
x
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஒரு பாடல் காட்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தோன்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிகில் படம் வரும் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப்பெண்ணே பாடலில் நடிகர் விஜயுடன் ஏ.ஆர்.ரஹ்மான் தோன்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு படங்களுக்கு  இசையமைத்துள்ள  ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரை எந்தவொரு படத்தின் காட்சியிலும் தோன்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்