நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சர்ச்சையை கிளப்பும் டிஜிபி... விடை தேடும் சந்தேகம்...

எண்பதுகளின் இளைய நெஞ்சங்களில் வாழும், நடிகை ஸ்ரீதேவியின் உயிரிழப்பு, ஒரு கொலையாக இருக்கலாம் என கேரள டி.ஜி.பி. ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சர்ச்சையை கிளப்பும் டிஜிபி... விடை தேடும் சந்தேகம்...
x
தமிழகத்தின் சிவகாசியை பூர்வீகமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி, பிறந்த நாளாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கந்தன் கருணை திரைப்படம் முதல் சாதித்ததெல்லாம் சரவெடிதான். 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்தவர். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் நடித்தது முதல், தமிழ் இளைஞர்களின் நெஞ்சில் மயிலாக குடியேறியவர் ஸ்ரீதேவி. இந்த நிலையில்தான், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி, குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், அது, இயற்கை மரணமாக இருக்க முடியாது என தமது கட்டுரை ஒன்றில் எழுதி அதிரடி கிளப்பியிருக்கிறார் கேரள சிறைத்துறை டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங்.

கேரளாவில், அண்மையில் உயிரிழந்த தமது நண்பரும், தடய அறிவியல் நிபுணருமான 73 வயது உமாதாதன், கேரளாவின் பல சிக்கலான கொலை வழக்குகளில் துப்பு துலக்க உதவியவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், உமாதாதனை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டுள்ள டிஜிபி, குளியல் தொட்டியில், கால்களோ, தலையோ மூழ்குவதற்கு வாய்ப்பில்லை என்று அவர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். வேறொருவர் அழுத்தம் தராமல் ஸ்ரீதேவி மூழ்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று நண்பர் கூறியதாக தெரிவித்துள்ள டிஜிபி ரிஷிராஜ் சிங், பல்வேறு சூழ்நிலை ஆதாரங்கள் நடிகை ஸ்ரீதேவியின் மரணம், விபத்து அல்ல, கொலையாக இருக்கலாம் என நண்பர் கூறியதாக அதிர்ச்சி அளித்துள்ளார். இதனால், ஸ்ரீதேவி மரணத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்