"தரணி ஆள வா தளபதி" - சர்ச்சையை கிளப்பியுள்ள விஜய் பிறந்தநாள் போஸ்டர்

நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு டைரக்டர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
x
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு டைரக்டர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் தரணி ஆள வா தளபதி என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. திருவள்ளுவர் சிலை மற்றும் சென்னையின் முக்கிய தலங்களுக்கு மத்தியில் விஜய் நிற்பதும், பிரமிட் வடிவில் ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறுவது போன்றும் அதில் உள்ளது. விஜய்க்கு அரசியல் ஆசை இருப்பது போல் பலமுறை அவரது ரசிகர்கள் பேனர் வைத்திருந்த நிலையில்,  தற்போது வெளிப்படையாகவே தரணி ஆள வா தளபதி வாசகம் அடங்கிய போஸ்டரை வெளியிடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்