"திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம்" - இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு

தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம் கட்டித்தருவதாக, இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கு சொந்த செலவில் கட்டடம் - இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு
x
தமிழ் திரை இசை உலகில் இசைஞானி என்று கொண்டாடப்படும் இசையமைப்பாளர் இளையராஜாவின் 76 வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி இசைக் கொண்டாடும் இசை என்கிற பிரமாண்ட இசை நிகழ்ச்சி பூந்தமல்லி அருகே நடைபெற்றது. 

அந்த  நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, அந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி, திரை இசை கலைஞர்களின் நல வாழ்விற்கு பயன்படுத்தபடும் என்று கூறினார். 

திரை இசை கலைஞர் சங்கத்திற்கு, தனிப்பட்ட முறையில் செய்யும் இசை நிகழ்ச்சி என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், அந்த சங்கத்துக்கு சொந்த செலவில் கட்டிடம் கட்டித் தருவதாகவும் இளையராஜா அறிவித்தார். நிகழ்ச்சியில், திரைப்படத்தில் பின்னணி இசை எந்த அளவுக்கு பயன்படும் என்பதை வாசித்து காட்டியது இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

Next Story

மேலும் செய்திகள்