இளையராஜா பிறந்தநாள் - குவியும் வாழ்த்து

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா பிறந்தநாள் - குவியும் வாழ்த்து
x
இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை, வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இன்று காலை முதலே,  ஏராளமான ரசிகர்கள், காத்திருந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர்கள் விவேக் மற்றும் பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன், பின்னணி பாடகர் மனோ, இசையமைப்பாளர் தீனா, கவிஞர் சினேகன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், இன்று மாலை நடக்கவிருக்கும் இசை நிகழ்ச்சியில், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்