இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி...

விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில், எஸ்.என்.எஸ். மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் " தமிழரசன் ".
இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி...
x
விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில், எஸ்.என்.எஸ். மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் " தமிழரசன் ".  பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்துக்காக இளையராஜா இசையமைப்பில் யேசுதாஸ் ஒரு பாடல் பாடி இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்பை உண்டாகியது. இந்நிலையில் தற்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த செய்தி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெகு ஆண்டுகளுக்கு பிறகு யேசுதாஸ், எஸ்.பி.பி. இருவரும் இளையராஜா இசையில் பாடி இருப்பதால், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்