இடைவெளிக்கு பின் இணையும் இமயங்கள் : மீண்டும் "இளைய நிலா பொழியப் போகிறது"

இளையராஜாவும், எஸ்.பி.​பியும் மீண்டும் இணைந்து பங்கேற்கும் இசைக்கச்சேரியை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
இடைவெளிக்கு பின் இணையும் இமயங்கள் : மீண்டும் இளைய நிலா பொழியப் போகிறது
x
இளையராஜாவும், எஸ்.பி.​பியும் மீண்டும் இணைந்து பங்கேற்கும் இசைக்கச்சேரியை காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இளையராஜாவின் 75வது பிறந்த நாள் விழா வரும் ஜூன் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சில ஆண்டுகளாக பாடல் ராயல்டி பிரச்சினையால் பேசாமலும், இளையராஜாவின் கச்சேரிகளில் பாடாமலும் இருந்து வந்த எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் பாடுகிறார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா ஆகியோரது சந்திப்பு நடந்தது. இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையும் வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது

Next Story

மேலும் செய்திகள்