நடிகர் சங்க தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு - நாசர்

ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
x
ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்பட்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்களின் பணிகள் சட்ட ரீதியாக இன்று நிறைவடைந்து இருப்பதாக தெரிவித்தார். இதேபோல் முக்கிய வாக்குறுதியான  நடிகர் சங்க கட்டிட பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த சில மாதங்களில் பணிகள் நிறைவடைந்துவிடும் என துணை தலைவர் பொன்வண்ணன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்