போலீசாக களமிறங்கும் ஆண்ட்ரியா...

நடிகை ஆண்ட்ரியா தனது அடுத்த படத்தில் போலீசாக களமிறங்க உள்ளார்.
போலீசாக களமிறங்கும் ஆண்ட்ரியா...
x
நடிகை ஆண்ட்ரியா தனது அடுத்த படத்தில் போலீசாக களமிறங்க உள்ளார். இயக்குநர் தில் சத்யா இயக்கும் 'மாளிகை' என்ற படத்தில் இளவரசியாகவும், போலீசாகவும் ஆண்ட்ரியா நடிக்க உள்ளார். தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து ஜே கார்த்திக் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் இந்த படத்தில் போலீசாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு விஜய் ஆண்டனி வெளியிடுகிறார். சாய் கிருபா இசையில், ராம் சிங் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை பவானி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கமல் போரா தயாரிக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்