இளையராஜா 75 : செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு தயாரிப்பாளர் சங்க தேர்தல் மற்றும் பொதுக்குழு நடத்த கோரியும், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட இருக்கும் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் தயாரிப்பாளர்கள் ஜெ. சதீஷ் குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. மனு தாரரரின் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தயாரிப்பாளர் சங்க தலைவர் மீது குற்றச்சாட்டுகள் அதிகம் கூறப்படுவதால் இளையராஜா 75 நிகழ்ச்சியை ஏன் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க கூடாது என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து இளையராஜா நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை ஜனவரி 30 ஆம் தேதிக்குள்  தாக்கல் செய்ய தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்