பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : "ஆய்வு நடத்த 22 குழுக்கள் அமைப்பு"
பதிவு : ஜனவரி 12, 2019, 01:18 AM
மாற்றம் : ஜனவரி 12, 2019, 01:21 AM
மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படம் ஓடும் 22 தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு நடத்த 22 குழுக்களை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திர பாண்டி, உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சர்க்கார் திரைப்படத்துக்கு வசூலித்ததை போல், ரஜினி நடித்த பேட்ட, அஜித் நடித்த விஸ்வாசம் படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு தியேட்டருக்கு 3 பேர் வீதம் வருவாய்த் துறை, நகராட்சி அதிகாரிகள், வழக்கறிஞர் ஆணையர்கள் கொண்ட குழுவை அமைத்து நீதிபதிகள், உத்தரவிட்டுள்ளனர். இந்த குழுக்கள் ஜனவரி 17 வரை நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும், ஜனவரி 18-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3378 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2921 views

பிற செய்திகள்

பேட்ட வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது - கார்த்திக் சுப்பராஜ்

பேட்ட திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

39 views

மனதில் படுவதை பேச பெரியாரே காரணம் - நடிகர் சிலம்பரசன்

பெரியார் குறித்து பாடல் பாடியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக, நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்

11 views

90 எம்.எல் - புதிய திரைப்பட பாடல் வெளியீடு

நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்கும் "90 எம்.எல்" என்ற புதிய திரைப்படத்தில் இடம் பெறும் " பிரெண்டிடா..." என்ற பாடல் வெளியிடப்பட்டு உள்ளது

32 views

பெரியார் பற்றி பாடல் பாடியதில் மகிழ்ச்சி - நடிகர் சிலம்பரசன்

பெரியார் குறித்து பாடல் பாடியதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக, சென்னை பெரியார் திடலில் நடைபெற்று வரும் திராவிட திருநாள் விழாவில் பேசிய நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

71 views

திருப்பதியில் நடிகர் தனுஷ்,செளந்தர்யா சுவாமி தரிசனம்

திருப்பதியில் நடிகர் தனுஷ், அவருடைய மனைவி செளந்தர்யாவுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

6 views

"90 எம்.எல்" - புதிய திரைப்பட பாடல் வெளியீடு

நடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்கும் "90 எம்.எல்" என்ற புதிய திரைப்படத்தில் இடம் பெறும் " பிரெண்டிடா..." என்ற பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.