மன்மதன் - வல்லவன் பட உரிமை விவகாரம்: தேனப்பன் மீது டி. ராஜேந்தர் சரமாரி குற்றச்சாட்டு

சிலம்பரசன் நடித்த மன்மதன் - வல்லவன் பட உரிமை விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் தேனப்பன், சஞ்சய் லால்வானி மீது இயக்குனர் டி.ராஜேந்தர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
x
சிலம்பரசன் நடித்த மன்மதன் - வல்லவன் பட உரிமை விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் தேனப்பன், சஞ்சய் லால்வானி மீது இயக்குனர் டி.ராஜேந்தர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியில் சிலம்பரசனை அறிமுகப்படுத்த மன்மதன் படத்தை எடுக்க முயற்சி செய்ததாகவும், தற்போது அவர் தமிழ் திரைபடங்களில் பிசியாக இருப்பதால் எடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். 

மன்மதன் படத்தின் வட இந்திய உரிமத்தை விற்க முயன்ற போது தயாரிப்பாளர் தேனப்பனின் தூண்டுதலின் பேரில் எஸ்.என்.மீடியாவை சேர்ந்த சஞ்சய் லால்வானி உரிமம் தன்னிடம் இருப்பதாக பொய்யான ஆவணங்கள் மூலம் விற்க முயல்வதாகவும் டி.ராஜேந்தர் குற்றம்சாட்டினார். எந்த சூழலிலும் தனது உரிமையை விட்டு கொடுக்க மாட்டேன் என்றும் டி.ராஜேந்தர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்