தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்வைப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க மோதல், மேலும் முற்றியுள்ளது
தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்வைப்பு
x
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க மோதல், மேலும் முற்றியுள்ளது. நடிகர் விஷாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எதிரணியினர், சென்னை தியாகராயநகர் யோகாம்பாள் தெருவில் உள்ள சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது செய்யப்பட்டு, அவர் மீது, 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாலையில் நடிகர் விஷால் விடுவிக்கப்பட்டபோதிலும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு, கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் தலைமையிலான அதிகாரிகள் சீல்வைத்து, அதிரடி நடவடிக்கை எடுத்தனர். எனவே, இரு தரப்பினர் இடையே சமாதானம் ஏற்பட்டால் மட்டுமே தயாரிப்பாளர் சங்க அலுவலகம் மீண்டும் திறக்க, அனுமதிக்கப்படும்.

Next Story

மேலும் செய்திகள்